Apr 27, 2020 10:43 AM

அம்மாவின் இறுதி சடங்கு! - போனில் கதறிய அழுத பிரபல நடிகர்

அம்மாவின் இறுதி சடங்கு! - போனில் கதறிய அழுத பிரபல நடிகர்

கொரோனா வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஏழை, பணக்காரர்கள் என அனைத்து தரப்பினரும் வீட்டுக்குள் முடங்கியிருப்பதோடு, வேலை விஷயமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்ற சிலர், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.

 

அந்த வகையில், சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வீட்டுக்குள் இருந்தாலும், சிலர் படப்பிடிப்பு விஷயமாக வெளி இடங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், இவர்கள் தங்களது குடும்பத்தாரை பார்க்க முடியாமல் தவித்து வருவதோடு, அவர்களது குடும்பத்தாரும், வேறு இடத்தில் சிக்கிக்கொண்டவர்கள் நிலை எப்படி இருக்குமோ!, என்று கவலையில் இருக்கிறார்கள்.

 

இதற்கிடையே, பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரும், பல ஹாலிவுட் படங்களில் நடித்தவருமான இர்ஃபான் கான், ஊரடங்கு காரணமாக ஜெய்ப்பூரில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

 

இந்த நிலையில், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் இர்ஃபான் கானின் அம்மா சாயிதா பேகம், கடந்த சனிக்கிழமை உயிரிழந்துவிட்டார். ஆனால், அவரது இறுதி சடங்கில் கலந்துக் கொள்ள பல்வேறு வகையில் இர்ஃபான் கான் முயன்றாலும் அவரால் ஜெய்ப்பூரில் இருந்து வெளியேற முடியவில்லையாம்.

 

இதையடுத்து, தனது அம்மாவின் இறுதி சடங்கை போனில் பார்த்து கதறி அழுத நடிகர் இர்ஃபான் கான், இந்த நிலை எந்த மகனுக்கும் வர கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

 

Actor Irfan Khan