ரஜினியை கொலை செய்ய முயற்சி! - காப்பாற்றிய ஸ்டண்ட் நடிகர்

’பேட்ட’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த், தனது அடுத்தப் பட வேலையில் பிஸியாகியுள்ள நிலையில், அவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் குறித்த தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டண்ட் நடிகர் அதிரடி அரசு இயக்கி நடித்திருக்கும் படம் ‘கபடி வீரன்’. இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், நடிகர் ராதாரவி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகை நமீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி, அதிரடி அரசு பிரபல நடிகர் ஒவர் மீது நடந்த கொலை முயற்சியை தைரியமாக தடுத்து நிறுத்தியதாக கூறினார். ஆனால், அவர் எந்த நடிகர் என்று குறிப்பிடவில்லை.
அவரை தொடர்ந்து பேசிய ஜாக்குவார் தங்கம், ராதாரவி சார் கூறியது ரஜினிகாந்தை தன. கர்நாடாகவில் ரஜினிகாந்தை ஒருவர் கத்தியால் குத்த வந்தார், அப்போது அதிரடி அரசு தான் குறுக்கே புகுந்து தன் மீது கத்தி குத்து வாங்கி ரஜினியை காப்பாற்றினார், என்று கூறினார்.
ரஜினியை கொலை செய்ய முயன்ற இந்த தகவல் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், தற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவல் மீண்டும் கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.