”என் மகள் ஆர்யாவை காதலிக்கவில்லை”! - சாயீஷா அம்மாவின் பேட்டியால் பரபரப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா, தமிழ் சினிமாவின் பிளேய் பாய் என்று செல்லமாக அழைக்கப்படுவார். அதற்கு காரணம், அவர் எந்த ஹீரோயினுடன் நடித்தாலும், அவருடன் இணைத்து காதல் கிசுகிசுக்கள் ஏராளமாக வெளியாவது தான்.
அதேபோல், ஆர்யாவுக்கு எப்போது திருமணம் என்பதில் பலர் ஆர்வமாக இருந்தனர். இதற்கிடையே, மணப்பெண்ணை தேடும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்யா, அந்த நிகழ்ச்சியின் மூலம் பல சர்ச்சைகளிலும் சிக்கினார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான சாயீஷாவும், ஆர்யாவும் காதலிப்பதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. பிறகு, சாயீஷா வீட்டில் ஆர்யாவை பிடிக்கவில்லை என்றும், அதனால் திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், இது குறித்து ஆர்யா மற்றும் சாயீஷா தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்போ அல்லது மறுப்போ வெளியாகமல் இருந்தது.
இந்த நிலையில், காதலர் தினமான இன்று, நடிகை சாயீஷாவை திருமணம் செய்துக் கொள்வது குறித்து மனம் திறந்திருக்கும் ஆர்யா, மார்ச் மாதம் தங்களது திருமணம் நடைபெற இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதனால், ஆர்யா - சாயீஷா காதல் திருமணம் உறுதி செய்யப்பட்டது.
இந்த தகவலை ஆர்யா வெளியிட்ட சில மணி நேரங்களில், பேட்டி கொடுத்த நடிகை சாயீஷாவின் அம்மா, எனது மகள் ஆர்யாவை கதலிக்கவில்லை, என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் கூறிய அவர், ஆர்யாவும், சாயீஷாவும் காதலிக்கவில்லை. சாயீஷாவை பிடித்து போனதால் ஆர்யாவின் பெற்றோர் எங்களிடம் திருமணம் குறித்து பேசினார்கள், எங்களுக்கும் ஆர்யாவை பிடித்திருந்ததால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தோம். அதனால், இது காதல் திருமணம் அல்ல, பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம், என்று தெரிவித்துள்ளார்.