Jan 17, 2020 06:49 AM

நீதிமன்ற வழக்கை மறைத்து பொய்யான தகவலை பரப்பும் மிஷ்கின்!

நீதிமன்ற வழக்கை மறைத்து பொய்யான தகவலை பரப்பும் மிஷ்கின்!

ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் குடும்ப வாரிசான மைத்ரேயா என்பவரை ஹீரோவாக்குவதாக கூறி அவரது தந்தை ரகுநந்தனிடம் ரூ.1 கோடியை அட்வான்ஸாக பெற்றுக் கொண்ட இயக்குநர் மிஷ்கின், சொன்னது போல் படம் எடுக்காததோடு, அப்பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இருந்ததையும், மைத்ரேயாவை நடிக்க வைப்பதாக கூறிய கதையை உதயநிதியை வைத்து ‘சைக்கோ’ என்ற தலைப்பில் படம் எடுப்பதை பற்றியும் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த மைத்ரேயா, சிம்புவின் ஏமாற்று வேலை குறித்து பகிரங்கமாக புகார் அளித்தார். அதன் பிறகு ரகுநந்தன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், ‘சைக்கோ’ படத்தின் படப்பிடிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பதறிப்போன மிஷ்கின், மூன்று தவனையில் ரூ.1 கோடியை திருப்பி கொடுத்துவிடுவதாக உத்தரவாதம் அளித்தார். அதன்படி, ரூ.50 லட்சத்திற்கான செக் ஒன்றை கொடுத்தவர், மீதியுள்ள ரூ.50 லட்சத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால், மைத்ரேயா தரப்பு மீண்டும் நீதிமன்றத்தை நாட, அதனால், சைக்கோ படத்தின் ரிலீஸுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியிருப்பதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

இதையடுத்து, சைக்கோ தொடர்பாகவும், இயக்குநர் மிஷ்கின் தொடர்பாகவும் யாரும் வழக்கு தொடரவில்லை. பொய்யான செய்தியை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. இதுபோல் தொடர்ந்து பொய்யான செய்தியை வெளியிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கி எடுப்போம், என்று சைக்கோ படத்தை தயாரித்திருக்கும் டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், தங்களது பி.ஆர்.ஓ மூலம் வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டது.

 

ஆனால், டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கூறியது தான் பொய், ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தான் உண்மை என்பதற்கான ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது.

 

மேலும், இது தொடர்பாக மைத்ரேயாவிடம் கேட்டதற்கு, நீதிமன்றம் உத்தரவிட்டபடி இயக்குநர் மிஷ்கின் அந்த மீதி தொகையான ரூபாய் ஐம்பது லட்சத்தை இதுவரை திருப்பி தரவில்லை என்றார். இதன் காரணமாக மீண்டும் நீதிமன்றத்தை நாடி மிஷ்கின் கொடுக்க வேண்டிய ரூபாய் ஐம்பது லட்சத்தை பெற்று தரும்படியும், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாகவும் மைத்ரேயா தெரிவித்தார்.

 

Mythreya

 

இயக்குநர் மிஷ்கின் மீது நீதிமன்ற வழக்கு இருப்பது வெளியே தெரிந்தால், சைக்கோ படத்தின் வியாபாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தான், அப்படி ஒரு வழக்கே இல்லை, என்று டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால், வழக்கு ஒன்று இருக்கும் போதும், மீண்டும் மிஷ்கின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ரகுநந்தன் தயாராக இருப்பது உண்மை என்ற போதில், டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் மிஷ்கின் மீது எந்த ஒரு வழக்கும் இல்லை, என்று அறிவித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.

 

அதாவது, நீதிமன்றத்தின் உத்தரவை மறைத்து பொய்யான தகவலை இயக்குநர் மிஷ்கினும், டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் பரப்பி வருவதால், இதன் மூலமாகவும் அவர்கள் பிரச்சினையில் சிக்க உள்ளதாக பேசப்படுகிறது.

 

Court Copy

 

Court Copy

 

Court Copy

Court Copy