Jun 18, 2019 01:33 PM

நடிகர் சங்க தேர்தலுக்கு தடை! - உயர் நீதிமன்றம் அதிரடி

நடிகர் சங்க தேர்தலுக்கு தடை! - உயர் நீதிமன்றம் அதிரடி

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கு வரும் ஜுன் 23 ஆம் தேதி சென்னையில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பொருப்பில் இருக்கும் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தலைமையிலான பாண்டவர் அணியும், புதிதாக உதயமாகியிருக்கும் கே.பாக்யராஜ், ஐசரி கணேஷ் ஆகியோரது தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

 

தேர்தலுக்காக இரு அணிகளும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், நடிகர் சங்கத்தின் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அதாவது, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடிகர் சங்கம் தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் அறிவிப்பும் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

 

தற்போது, அப்பகுதியில் தேர்தல் நடத்தினால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும், என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம், எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது, என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும், மாற்று இடத்தை பரிந்துரைக்கும்படியும் நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.

 

ஆஹா..., ராதாரவி சொன்னது போல தேர்தல் நடக்காது போலிருக்கே...