Jun 08, 2019 01:03 PM
நடிகர் சங்க தேர்தல் - கார்த்தியை எதிர்த்து களம் இறங்கும் முன்னணி நடிகர்

வரும் ஜூன் 23 ஆம் தேதி நடக்க இருக்கும் நடிகர் சங்க தேர்தலில் கடந்த தேர்தலில் வெற்றிப் பெற்ற பாண்டவர் அணி மீண்டும் போட்டியிரும் நிலையில், அந்த அணிக்கு எதிரான அணியை உருவாக்கும் முயற்சியில் சில ஈடுபட்டு வந்தார்கள்.
இந்த நிலையில், கே.பாக்யராஜ் தலைமையில் விஷால் அணிக்கு எதிராக ஒரு அணி உருவாகியுள்ளது. இதில் பாக்யராஜ் தலைவர் பதவிக்கு போட்டியிட, ஐசரி கே.கணேஷ் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். மேலும், விஷால் அணியில் இருப்பவர்கள் சிலரை தங்களது அணிக்கு இழுக்கும் முயற்சியிலும் பாக்யராஜ் அணி ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், விஷால் அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் கார்த்தியை எதிர்த்து பலமான ஒரு போட்டியாளரை நிறுத்த வேண்டும் என்று நினைத்த ஐசரி கணேஷ், அதற்காக ஜெயம் ரவியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.