May 30, 2019 06:37 AM

ராதிகாவின் முடிவால் நடிகர் சங்க தேர்தலில் புதிய திருப்பம்!

ராதிகாவின் முடிவால் நடிகர் சங்க தேர்தலில் புதிய திருப்பம்!

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கு வரும் ஜூன் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தலைவராக் இருக்கும் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

 

நாசர் தலைமையிலான அணியை எதிர்த்து நடிகை ராதிகா தலைமையில் புதிய அணி ஒன்று போட்டி போட போவதாக கூறப்பட்டது. சரத்குமார் மற்றும் ராதாரவி மீது மோசடி வழக்கு இருப்பதால், அவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாததால், ராதிகா தேர்தலில் களம் இறங்குவார் என்று கூறப்பட்டது.

 

ஆனால், இதை மறுத்திருக்கும் ராதிகா, தேர்தலில் நான் போட்டியிடுவதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வதந்தி. தேர்தல் நடக்கும் நாள் அன்று நான் இங்கே இருக்கவே மாட்டேன், என்று தெரிவித்துள்ளார்.

 

ராதிகாவின் இந்த விளக்கத்தால், இந்த முறை நடிகர் சங்க தேர்தலில் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான அணிக்கு எதிராக போட்டியிட சரியான அணி இருக்காது என்பதால், தேர்தலும் பரபரப்பு இல்லாமல் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.