Jul 29, 2019 11:14 AM

வில்லி அவதாரம் எடுக்கும் நமீதா!

வில்லி அவதாரம் எடுக்கும் நமீதா!

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நமீதாவுக்கு, சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைப்பதில்லை. இதனால் கடை திறப்பு நடிகையாக வலம் வந்தவர், கடந்த 2017 ஆம் ஆண்டு வீரா என்ற தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரை திருமணம் செய்துக் கொண்டார்.

 

திருமணத்திற்குப் பிறகு பரத் நடிப்பில் வெளியான சுவடே தெரியாமல் போன ‘பொட்டு’ படத்தில் நடித்த நமீதா, ’மியா’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஆனால், இந்த படம் எப்போது வெளியாகும் என்று அப்படக்குழுவினருக்கே தெரியாததால், மீண்டும் கடை திறப்புகளில் நமீ கவனம் செலுத்தி வந்தார்.

 

இந்த நிலையில், தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படம் ஒன்றில் நமீதாவுக்கு வில்லி வேடம் கிடைத்திருக்கிறது. எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க ரெடியாக இருக்கும் நமீதா, வில்லி வேடத்திற்கு சட்டென்று ஓகே சொல்லிவிட்டாராம். இதில் ஹீரோயினாக வேதிகா நடிக்கிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.