Jun 22, 2020 12:06 PM

கொரோனாவுக்காக குழந்தைகளாக மாறிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி

கொரோனாவுக்காக குழந்தைகளாக மாறிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வரும் நிலையில், விரைவில் அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இருவருக்கும் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதால், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

 

நயன்தாராவுக்கு கொரோனா, என்றதும் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, இந்த தகவல் வேகமாக பரவ, பிறகு செய்தியாக தீயாக பரவியது. ஆனால், இது குறித்து மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேபோல், நயன் - விக்கி தரப்பும் அமைதியாக இருந்ததால், செய்தி உண்மை தானோ, என்றும் பேச்சு அடிபட்டது.

 

இந்த நிலையில், கொரோனா குறித்த செய்திக்கு விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி இன்று விளக்கம் அளித்திருக்கிறது. அதுவும் சாதாரண விளக்கம் அல்ல, இருவரும் சிறுவர்களாக மாறி, ஜாலியான மூட்டில் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

 

Vignesh Shivan and Nayanthara

 

அதாவது, தங்களுக்கு கொரோனா, என்று செய்தி வெளியிட்ட ஊடகங்களை ஜோக்கர், என்று விமர்சித்திருக்கும் விக்னேஷ் சிவன், அவர்களை வெறுப்பேற்றுவது போல குழந்தைத்தனமான சில்மிஷங்களை குழந்தையாகவே செய்திருக்கிறார்.

 

இதோ அந்த வீடியோ,