Aug 27, 2019 05:07 AM

நயன்தாராவை வைத்து படம் எடுத்தவர் திடீர் கைது!

நயன்தாராவை வைத்து படம் எடுத்தவர் திடீர் கைது!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார், தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகை, அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை உள்ளிட்ட பல்வேறு பெருமைகளோடு வலம் வரும் நயன்தாரா, தற்போது ரஜினியின் ‘தர்பார்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

 

இந்த நிலையில், நயன்தாராவை வைத்து ‘அறம்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கிய கோபி நயினார் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 

வேதாரண்யத்தில் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அப்பகுதியில் இருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இயக்குநர் கோபி நயினார், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் போராட்டம் நடத்தினார்.

 

Gopi Nayinar

 

போராட்டம் நடப்பதை அறிந்த மீஞ்சூர் போலீஸார், அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்துவதாக கூறி, போராட்டத்தை நிறுத்தியதோடு இயக்குநர் கோபி நயினாரையும் கைது செய்தனர்.