மாஸ் காட்டும் நயன்தாரா ரசிகர்கள்! - மிரண்டு போன சிவகார்த்திகேயன் தரப்பு

சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் ‘Mr.லோக்கல்’ படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. நயன்தாரா நடிப்பதாலேயே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் இன்று வெளியாகி, சிறப்பு காட்சிகள் உள்ளிட்ட அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்லாகியுள்ளது.
அதே சமயம், சிவகார்த்திகேயனின் ரசிகர்களுடம் இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்தின் ரிலீஸை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இப்படத்தின் ரிலீஸ் திருவிழா போல கொண்டாடப்பட்டது.
சிவகார்த்திகேயன் ரசிகர்களின் கொண்டாட்டம் ஒரு பக்கம் இருக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ரசிகர்கள் மறுபக்கம் பேனர், பாலபிஷேகம் என்று பட்டையை கிளப்பியுள்ளனர்.
சென்னை வெற்றி திரையரங்கில் சிவகார்த்திகேயனுக்கு நிகரான, நயன்தாராவின் சோலோ பேனரை வைத்து ரசிகர்கள் மாஸ் காட்டியதை பார்த்து, சிவகார்த்திகேயன் தரப்பே மிரண்டு போய்விட்டதாம்.
இதா அந்த பேனர்,