பிரிந்த நயன்தாரா நட்பு! - கிடைத்த புது நடிகையின் கால்ஷீட்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள பல படங்களில் நடித்து வருகிறார். இதில், அவர் நடித்த ‘அறம்’, ‘ஐரா’ ஆகிய படங்களை தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கோட்டபாடி ஜெ.ராஜேஷ், நயன்தாராவின் ஆடிட்டர் மற்றும் இன்றி அவரது நம்பிக்கைக்குரிய நெருங்கிய நண்பரும் கூட.
இவர்கள் நட்பில் தற்போது விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவை வைத்து சினிமாவுக்குள் நுழைந்த கோட்டபாடி ராஜேஷ், தற்போது பல பெரிய படங்களை தயாரித்து வரும் நிலையில், சமந்தாவை வைத்தும் ஒரு பிரம்மாண்ட படத்தை தயாரிக்க இருக்கிறார். எப்போதும் நயன்தாராவை முன்னிலைப்படுத்த கூடியவர் இந்த முறை வேறு ஒரு முன்னணி நடிகையிடம் சென்றதற்கு, நயன்தாராவுக்கும் ராஜேஷுக்கும் இடையே ஏற்பட்ட பிரிவு தான் காரணம் என்று கூறப்படுகிறது.
‘அறம்’ வெற்றியை தொடர்ந்து ‘அறம் 2’ தயாரிக்க ராஜேஷ் தயாராக இருந்தாலும், நயன்தாரா இதுவரை அவருக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. நயன்தாராவுக்காக காத்திருந்த ராஜேஷ், தற்போது சமந்தாவின் கால்ஷீட்டை வாங்கி படம் தயாரிக்க தொடங்கியிருப்பதால், நயன்தாரா ரொம்பவே அப்செட்டாகி விட்டாராம்.
அதே சமயம், தனக்கும் நயனுக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை. சமந்தா படம் அறம் தயாரிக்கும் போதே எடுக்கப்பட்ட முடிவு. நயன்தாரா எப்போது கால்ஷீட் கொடுத்தாலும், ‘அறம் 2’ தயாரிக்க நான் ரெடியாக இருக்கிறேன், என்று இந்த விவகாரம் தொடர்பாக ராஜேஷ் விளக்கம் அளித்திருக்கிறார்.