Aug 15, 2019 02:14 PM

அத்திவரதரை தரிசிக்க ஜோடியுடன் சென்ற நயன்தாரா!

அத்திவரதரை தரிசிக்க ஜோடியுடன் சென்ற நயன்தாரா!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வரும் நயன்தாராவின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘கொலையுதிர் காலம்’ மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது. இதனால், அடுத்தப் படத்தை வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என்பதில் நயன் தீவிரமாக இருக்கிறார்.

 

அதேபோல், என்ன தான் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், தமிழகத்தில் நடக்கும் முக்கியமான சம்பவங்களில் நயன்தாரா தலைகாட்டாமல் இருந்ததில்லை. ஜல்லிக்கட்டு பிரச்சினை, முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு என அத்தனை இடங்களிலும் நயன் ஆஜராகியிருக்கிறார்.

 

இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக இருக்கும் அத்திவரதர் தரிசனத்தில் இன்று நயனும் ஆஜராகியிருக்கிறார். எப்போதும் போல தனது காதலர் விக்னேஷ் சிவனுடன். 

 

நயன்தாரா இன்று அத்திவரதரை தரிசிக்க வந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி துவண்டு போயிருந்த சில பெருமாள் பக்தாஸ் குளுக்கோஸ் குடித்தது போல சற்று உற்சாகமடைந்தார்கள், என்பது கூடுதல் தகவல்.

 

இதோ நயனினி அத்திவரதர் தரிசனம்,