Jun 21, 2020 07:01 AM

நயன்தாராவுக்கு கொரோனா! - அதிர்ச்சியில் திரையுலகம்

நயன்தாராவுக்கு கொரோனா! - அதிர்ச்சியில் திரையுலகம்

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. பிரபல இயக்குநர் மிஷ்கின், நடிகர் அருண் விஜய், தயாரிப்பாளர் எடிட்டர் மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்களது வீடுகளில் தனைமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல் பரவி வருகிறது.

 

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவும், அவரது காதலர் விக்னேஷ் சிவனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் நயன்தாராவின் ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலகினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதோடு, சென்னையில் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்தும் வருகிறார்கள். இருவருக்கும் இந்த வாருட இறுதியில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற இருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியான நிலையில், தற்போது கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆனால், திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், பலருக்கு அறிகுறி தென்படுவதால் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.