அவரால் தான் நிம்மதி கிடைத்தது! - நயன்தாராவின் உருக்கமான பேச்சு

திரைப்பட விழாக்களில் பங்கேற்பதை தவிர்த்து வரும் நயன்தாரா, விருது வழங்கும் விழாக்களில் மட்டும் தவறாமல் கலந்துக் கொள்கிறார். அந்த வகையில், பிரபல தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் நடத்திய விருது விழாவில் நயன்தாரா, கலந்துக் கொண்டார். அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, ”ரசிகர்கள் அன்புக்கு நன்றி. சமீபகாலமாக ஜோடியாக சந்தோஷமாக புகைப்படங்கள் பகிர்வது பற்றி கேட்கிறீர்கள். சந்தோஷமாக இருப்பதால் அது என் முகத்திலும் தெரிகிறது. சந்தோஷத்தை விட இப்போது நிம்மதியாக உணர்கிறேன். அந்த நிம்மதி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். உங்கள் பெற்றோர், வாழ்க்கை துணை, துணையாக போகிறவர் என யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். யாருமே இல்லாதபோது அவர் தான் உடன் இருந்தார்.
புதுவருட சபதம் எதுவும் எடுக்கவில்லை. ரசிகர்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும். அவர்களின் அன்பு போதும்.
நான் நடிக்க வந்தபோது இப்படி நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வரவில்லை. அது யார் படமாக இருந்தாலும் சரி. வெற்றி பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஹீரோயின் படங்கள் வருவது பெருமையாக இருக்கிறது.
சமூகவலைதளங்களில் நெகட்டிவிட்டி அதிகமாக இருக்கிறது. பிடிக்காதவர்களை விட்டுவிடுங்கள். அவர்களை காயப்படுத்தி ஏன் சங்கடப்படுத்த வேண்டும்? எனக்கு கடவுள் நம்பிக்கை எப்போதுமே அதிகம். அன்பாக இருங்கள் என்பது மட்டும் தான் ரசிகர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை”. என்று தெரிவித்தார்.