Jun 14, 2019 06:21 AM

வியாபாரம் ஆகாத நயன்தாரா படம்! - திண்டாட்டத்தில் தயாரிப்பாளர்

வியாபாரம் ஆகாத நயன்தாரா படம்! - திண்டாட்டத்தில் தயாரிப்பாளர்

நயன்தாரா நடிப்பில் உருவான ‘கொலையுதிர் காலம்’ இன்று வெளியாக இருந்த நிலையில், நீதிமன்ற வழக்கால் தடை விதிக்கப்பட்டு வெளியாகாமல் போய்விட்டது. படம் வெளியாகாமல் போனதற்கு இது ஒரு காரணம் என்றாலும், முக்கிய காரணமாக விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் வேறு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

 

கமல் ஆதரவு மற்றும் அரவணைப்பு மூலம் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தினால் இயக்குநரான சக்ரி டோலெட்டி, அஜித்தை வைத்து ‘பில்லா 2’ படத்தை இயக்கியதோடு, அதை செம மொக்கையான படமாகவும் கொடுத்தார். இதனால், அப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமா இவரை திரும்பி கூட பார்க்கவில்லை.

 

இதற்கிடையில் தான் நயன்தாராவை வைத்து ‘கொலையுதிர் காலம்’ படத்தை இயக்கினார். எட்செட்டெரா எண்டெர்டய்ன்மெண்ட் நிறுவனத்தின் வி.மதியழகன் இப்படத்தை தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே பல படங்களை தயாரித்திருந்தாலும் எந்த படமும் இவருக்கு வெற்றியை பெற்றுத்தரவில்லை. இருப்பினும் தொடர்ந்து படங்களை தயாரித்துக் கொண்டு தான் இருக்கிறார்.

 

இந்த நிலையில், மதியழகன் பெரும் நம்பிக்கையோடு தயாரித்த ‘கொலையுதிர் காலம்’ படம் ரிலீஸின் போது பல சிக்கல்களை சந்தித்துள்ளது. குறிப்பாக இப்படத்தைத் தமிழகம் முழுக்க மினிமன் கியாரண்டி முறையில் வாங்க யாரும் முன்வரவில்லையாம். இதனால் டிஸ்டிரிபியூசன் எனும் விநியோக முறையில் கொடுக்க தயாரிப்பாளர் முன்வந்திருக்கிறார்.

 

ஆனால் அதற்கும் பலர் தயாராக இல்லை என்கிறார்கள். ஒரு பகுதிக்கு இருபது லட்சம் ரூபாய் கொடுத்து படத்தை வாங்கி வெளியிடுகிறார்கள், அங்கு பத்து லட்சம் ரூபாய் மட்டுமே வசூலாகிறது என்றால் மீதி பத்து லட்ச ரூபாயை தயாரிப்பாளர் திருப்பித் தந்துவிடவேண்டும் என்பதுதான் விநியோக முறை. இம்முறையில் விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட்டம் வராது, என்றாலும் மீதி பணத்தை திருப்பி வாங்குவதற்குள் நொந்து நூடுல்ஸாக வேண்டும் என்பதால், விநியோக முறையில் பணம் கொடுக்கவும் பலர் தயங்கியதாலே பட வெளியீடு தள்ளிப்போனது என்கிறார்கள்.

 

ஆனால், தயாரிப்பு தரப்போ பாலாஜி குமார் என்பவர் தொடர்ந்த வழக்கின் காரணமாகவே படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதாக தெரிவித்துள்ளது.