May 03, 2019 03:30 PM

விக்னேஷ் சிவன் தரப்பு கொடுத்த நெருக்கடி! - திருமணத்திற்கு ஓகே சொன்ன நயன்தாரா

விக்னேஷ் சிவன் தரப்பு கொடுத்த நெருக்கடி! - திருமணத்திற்கு ஓகே சொன்ன நயன்தாரா

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, எத்தனை புதுமுக ஹீரோயின்கள் வந்தாலும் நம்பர் ஒன் இடத்தில் அவரே இருந்து வருகிறார். ஒரு பக்கம் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருபவர், மறுபக்கம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து தொடர் வெற்றிகளை கொடுக்கிறார்.

 

இதனால், கை நிறைய பட வாய்ப்புகளோடு இருக்கும் நயன்தாரா, அவ்வபோது தனது காலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தாலும், திருமண விஷயத்தில் என்னவோ மவுனமாகவே இருக்கிறார்.

 

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சென்னையில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், லிவிங் டூ கெதர் முறையில் ஒன்றாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், விக்னேஷ் சிவன் திருமணத்தில் ஈடுபாடு காட்டினாலும், நயன்தாரா பட வாய்ப்புகளை காரணம் காட்டி திருமணத்தை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், விக்னேஷ் சிவனின் குடும்பத்தாரின் நெருக்கடியால் நயன்தாரா, திருமணத்திற்கு ஓகே சொல்லியிருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்த அனுமதி அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.