Jun 14, 2020 05:51 AM

பிரபல இயக்குநர் படத்தை நிராகரித்த நயன்தாரா!

பிரபல இயக்குநர் படத்தை நிராகரித்த நயன்தாரா!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவின் நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இப்படம் ஒடிடி-யில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி, அதை மறுத்ததோடு, படத்தை நிச்சயம் திரையரங்கில் தான் ரிலீஸ் செய்வோம், என்றும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்திலும், அவர் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ரஜினியின் ‘அண்ணாத்தே’ என்று கை நிறைய பட வாய்ப்புகளுடன் இருக்கும் நயன்தாராவுக்கு முன்னணி ஹீரோக்களின் படங்கள் மட்டும் இன்றி, கதாநாயகியை மையப்படுத்திய கதைகளும் அவரை தேடி வருகின்றது.

 

இந்த நிலையில், பல வெற்றிப் படங்களை கொடுத்த பிரபல இயக்குநர் ஒருவர் கதாநாயகியை மையப்படுத்திய கதை ஒன்றில் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்து அவரை அனுகியபோது, நயன்தாரா “நோ” சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அந்த இயக்குநர் சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தைக் கொடுத்த மிஷ்கின் தான். விஷாலுடன் ஏற்பட்ட மோதலால் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் இருந்து விலகிய இயக்குநர் மிஷ்கின் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். அதற்குள் அருண் விஜயை வைத்து ஒரு படத்தை முடித்துவிட முடிவு செய்திருப்பவர், அதற்காக ‘அஞ்சாதே’ படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்துள்ளார்.

 

Director Mysskin

 

மேலும், கதாநாயகியை மையப்படுத்திய கதை ஒன்றையும் எழுதி முடித்திருப்பவர், அதில் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்து, அவரிடம் கதை சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட நயன்தாரா, இந்த கதை தனக்கு செட்டாகாது, என்று கூறி மறுத்துவிட்டாராம்.

 

கடுப்பான இயக்குநர் மிஷ்கின், தனது ‘சைக்கோ’ படத்தில் நடித்த அதிதி ராவ், நித்யா மேனன் ஆகிய ஒருவரில் ஒருவரை வைத்து இந்த கதையை வெற்றிப்படாக்கி காட்டுகிறேன், என்று சவால் விட்டிருக்கிறாராம்.