Aug 03, 2018 03:00 AM

நயந்தாரா படப்பிடிப்பில் பரபரப்பு - இடித்து தள்ளப்பட்ட செட்!

நயந்தாரா படப்பிடிப்பில் பரபரப்பு - இடித்து தள்ளப்பட்ட செட்!

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயந்தாராவுக்கு, பல மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் வந்தாலும், அவர் சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். அஜித் மற்றும் கமல் ஆகியோருக்காக தனது நிபந்தனைகளை சிறிது தளர்த்திவிட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

அதேபோல், தெலுங்கிலும் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் ஹீரோயினாக நயந்தாரா நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்திற்காக போடப்பட்ட பிரம்மாண்ட செட்டை மத்திய அரசு சமீபத்தில் இடித்து தள்ளியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வருமான வரித்துறைக்கு சொந்தமான இடத்தில் தான் அந்த செட் போடப்பட்டு இருக்கிறதாம். அதுவும் முன் அனுமதி பெறாமல் போடப்பட்ட அந்த செட்டை அகற்றும்படி ஏற்கனவே அறிவுறுத்தியும் அதை படப்புக்குழு செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

 

மேலும், ராம்சரணின் நடிப்பில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ படத்திற்காக தான் அந்த செட் போடப்பட்டதாகவும், தற்போது சிறுது மாற்றத்துடன் ‘ரைசா நரசிம்ம ரெட்டி’ படத்திற்காகவும் அந்த செட் பயன்படுத்ததப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

 

எது எப்படியோ, நயந்தாராவின் படப்பிடிப்பில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.