சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற ‘நெடுநல்வாடை’

அறிமுக இயக்குநர் செல்வக்கண்ணன் இயக்கத்தில், பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி விமர்சனம் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றிப் பெற்ற ‘நெடுநல்வாடை’ சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.
26 நாடுகளில் இருந்து 106 திரைப்படங்கள் கலந்துக் கொண்ட இன்னொவெட்டிவ் பிலிம் அகடாமி (Innovatie Film Acadamy) சார்பில் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட ‘நெடுல்நல்வாடை’ அனைவரது பாராட்டுடன் விருதும் வென்றுள்ளது. இப்படம் வெல்லும் முதல் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இயக்குநர் செல்வக்கண்ணன் கூறுகையில், “ரொம்ப பெருமையா இருக்கு, இவ்வளவு பெரிய, பல நாடுகளில் இருந்து, பல மொழிகளில் இருந்து வந்திருக்கும் முக்கியமான இயக்குநர்கள், சினிமாத் துறையில் இருந்து வந்திருப்போர்கள் முன்னாடி எங்கள மாதிரி புதியவர்கள் நிக்கிறோம்கிறது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எங்களை அங்கீகரித்த Innovatie Film Acadamy ( IFA) க்கு ரொம்ப நன்றி. எங்கள் படத்தை பரிந்துரைத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நன்றி. தமிழ் சினிமா துறையில் உருவான முதல் CROWD FUNDING திரைப்படம் நெடுநல்வாடை. இந்த நேரத்தில் என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்கள், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படத்தை தயாரித்த என் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.