Mar 07, 2020 06:51 AM

வரலட்சுமியின் வயதால் ஏற்பட்ட சர்ச்சை!

வரலட்சுமியின் வயதால் ஏற்பட்ட சர்ச்சை!

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, சிம்புவின் ‘போடா போடி’ மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்த் பல படங்களில் நடித்து வருபவர், வில்லி, குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில், தயாரிப்பாளரும், இயக்குநரும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், அவர்கள் பேசிய போன்கால் ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் வரலட்சுமி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், ராதிகா தனது அப்பாவின் மனைவி மட்டுமே, தனக்கு தாய் அல்ல, எறும் கூறினார்.

 

இந்த நிலையில், மார்ச் 2 ஆம் தேதி தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடி வரலட்சுமிக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தார்கள். அப்போது, ரசிகர்கள் ஒருவர், “ஆண்டி உங்களுக்கு 35 வயதாகிறதா?” என்று வரலட்சுமியிடம் கேட்டார். அந்த ரசிகரின் இந்த கிண்டலான பதிவுக்கு, பல ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

 

தற்போது, தனது வயதை கிண்டல் செய்த ரசிகருக்கு பதில் அளித்திருக்கும் வரலட்சுமி, “எஸ் அங்கிள், எனி ப்ரோப்லேம்” என்று கேட்டுள்ளார்.