Jun 13, 2020 05:01 AM

விஜய் 65 படத்திற்கு புதிய கதாநாயகி தேர்வு! - இவர் தான் அவர்

விஜய் 65 படத்திற்கு புதிய கதாநாயகி தேர்வு! - இவர் தான் அவர்

விஜயின் 64 வது படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு தயாராக உள்ளது. திரையரங்கங்கள் திறக்கப்பட்டவுடன் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் ரெடியாக இருக்கிறார்கள். அதே சமயம், விஜயின் 65 வது படத்தின் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’ என விஜயை வைத்து மூன்று படங்கள் இயக்கியிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் தான் விஜயின் 65 வது படத்தையும் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதையடுத்து ‘துப்பாக்கி’ இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டது. ஆனால், இதை மறுத்த ஏ.ஆர்.முருகதாஸ், விஜயின் 65 வது படத்திற்காக புது கதை ஒன்றை எழுதிவிட்டேன், இது துப்பாக்கி இரண்டாம் பாகம் அல்ல, என்று கூறினார்.

 

Kajal Agarwal

 

மேலும், படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருப்பதாகவும், மற்றொரு கதாநாயகி தேவு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் பூஜ ஹெக்டேவை மற்றொரு நாயகியாக ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால், அவர் சம்பளம் அதிகம் கேட்டதால் அவரை தேர்வு செய்யவில்லை.

 

இந்த நிலையில், விஜயின் 65 வது படத்திற்கு மற்றொரு நாயகியாக மடோனா செபஸ்டியன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

 

Madonna Sebastian

 

ஆக, கதாநாயகிகள் தேர்வு முடிவுக்கு வந்தது போல, கொரோனா பிரச்சினையும் முடிவுக்கு வந்துவிட்டால், விஜய் 65 படப்பிடிப்பு தொடங்கிவிடும்.