Mar 13, 2020 06:14 AM

பா.ஜ.க-வுக்கு புதிய தலைவர் விவகாரம்! - கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்த எஸ்.வி.சேகர்

பா.ஜ.க-வுக்கு புதிய தலைவர் விவகாரம்! - கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்த எஸ்.வி.சேகர்

முன்னாள் சட்டமன்ற உறுபிப்பினரும் நடிகருமான எஸ்.வி.சேகர், அதிமுக சார்பில் போட்டியிட்டு தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அக்கட்சியில் சிலருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகியவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பா.ஜ.க-வில் இணைந்தார்.

 

தற்போது பா.ஜ.க-வின் முக்கிய பிரமுகராக விளங்கும் எஸ்.வி.சேகர், அவ்வபோது சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. இருந்தாலும், எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக தனது கருத்தை அவர் தெரிவித்து வருகிறார்.

 

இதற்கிடையே, தமிழக பா.ஜ.க-வுக்கு தலைவராக ஸ்ரீ முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ளார்.

 

பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முருகனுக்கு, பா.ஜ.க பிரமுகர்கள் பலர் வாழ்த்து கூறி வரும் நிலையில், எஸ்.வி.சேகர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் சாதி வெறியை தூண்டும் விதமாக முருகன் நியமிப்பு குறித்து விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ஆனால், உண்மை என்னவென்றால், எஸ்.வி.சேகரின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து, அதில் சாதி வெறியை தூண்டும் விதமான பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கும் எஸ்.வி.சேகர், இதுபோன்ற விஷமிகளை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும், தனது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தவர்களை எஸ்.வி.சேகர் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தும் உள்ளார்.

 

இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவு இதோ, 

 

SV Sekar

 

SV Sekar