Jan 04, 2020 08:14 AM

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் புதிய திருப்பம்! - அவரது இறப்புக்கு இது தான் காரணமாம்

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் புதிய திருப்பம்! - அவரது இறப்புக்கு இது தான் காரணமாம்

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி, கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் உறவினர் திருமணத்தில் பங்கேற்ற போது, தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அவரது மரணம் குறித்து பல சர்ச்சையான தகவல்களும் வெளியாகின.

 

மேலும், துபாயில் இருந்து அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவருவதிலும் பல சிக்கல்கள் இருந்தது. அனைத்தையும் சமாளித்து ஸ்ரீதேவியின் குடும்பத்தார் அவரது உடலை இந்தியா கொண்டு வந்த நிலையில், அவரது மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறியதால், ஸ்ரீதேவியின் குடும்பத்தார் மன வேதனை அடைந்தனர். பிறகு ஒரு வழியாக அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்தது.

 

இந்த நிலையில், ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று பற்றி வெளியாகியிருக்கும் புத்தகத்தில், ஸ்ரீதேவிக்கு ரத்த அழுத்த நோய் இருந்ததாகவும், அதனால், அவர் இரண்டு மூன்று முறை வீட்டு பாத்ரூமில் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டிருக்கிறது. அதேபோல், அவர் துபாய் ஓட்டல் அறை பாத்ரூமிலும் ரத்த அழுத்தத்தால் மயங்கி விழுந்து இறந்திருப்பார், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால், முடிவுற்ற ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக மீண்டும் சர்ச்சையான தகவல்கள் பரவ தொடங்கியிருக்கிறது.