மாஸ் காட்டிய ‘என்.ஜி.கே’! - சூர்யாவுக்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘என்.ஜி.கே’ படம் சமீபத்தில் ரிலீஸாகி சூர்யா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதே சமயம், கலவையான் விமர்சனங்களை பெற்றிருக்கும் இப்படம் செல்வராகவனின் ஸ்டைலில் இல்லை என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், குடும்பத்தோடு பார்க்க கூடிய அரசியல் படமாக ‘என்.ஜி.கே’ உள்ளது.
மேலும், முதல் முறை படம் பார்த்தவர்கள் மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாக கூறுவதால், அடுத்தடுத்த நாட்களில் பாசிட்டிவான விமர்சனங்கள் வர, படத்தின் வசூலும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ‘என்.ஜி.கே’ வெளியான மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.23 கோடி வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகிறது.
அதுமட்டும் இன்றி, சூர்யாவின் திரைப்பயணத்தில் இப்படத்திற்கு தான் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.