May 09, 2021 04:35 AM

கல்வி பிரச்சனையை பேசும் பைலட் படம் ’நிலைகெட்ட மனிதர்கள்’

கல்வி பிரச்சனையை பேசும் பைலட் படம் ’நிலைகெட்ட மனிதர்கள்’

அறிமுக இயக்குநர் சரண் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள பைலட் படம் ‘நிலைகெட்ட மனிதர்கள்’. சமூக பிரச்சனை மற்றும் கல்வி குறித்து பேசும் இப்படத்தில் இயன் கிறிஸ்டியன், மதுக்கூர் சத்யா, இப்ராகிம், முத்து.வி, நா.ராமலிங்கம், எஸ்.கே.மீசை இராஜேந்திரன், ம.மோகன்ராஜ், சதீஷ்குமார்.ச, மாலிக்கான் ஆகியோர் நடித்துள்ளனர். 

 

இப்படம் குறித்து இயக்குநர் சரண் மணி கூறுகையில், “இந்த படம் கல்வி பிரச்சனையை மையமாக கொண்டது. காடு அருகில் குடிசையில் வசிக்கும் ஆறுமுகம் தன் மகனை படிக்க வைக்க முயற்சிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார்  என்பதை உரக்க சொல்லும் படம் ‘நிலைகெட்ட மனிதர்கள்’ என்றார்.

 

Nilaiketta Manithargal

 

ஸ்ரீராமன் ரா.கு பழனி ஒளிப்பதிவில், ரவிராகவ் இசையில் உருவாகியுள்ள ‘நிலைகெட்ட மனிதர்கள்’ பைலட் படம் வரும் மே 23 ஆம் தேதி MOVIEWUD ஒடிடி தளத்தில் வெளியாகிறது.