Sep 18, 2019 06:07 PM
ஆந்திராவில் செட்டிலாகும் நிவேதா பெத்துராஜ்!

’ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து ’பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு புடிச்சவன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்ததோடு, தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’, ‘சங்கத்தமிழன்’, ‘பொன்மாணிக்கவேல்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இதை தவிர வேறு தமிழ்ப் படங்கள் அவர் கையில் இல்லை என்றாலும், தெலுங்கில் ஏராளமான பட வாய்ப்புகளை பெற்று வருகிறாராம்.
இதையடுத்து, ஆந்திராவில் சொந்தமாக வீடு வாங்கி செட்டிலாக முடிவு செய்திருக்கும் நிவேதா பெத்துராஜ், தனது உதவியாளர் மூலம் பெரிய பங்களா வீடு ஒன்றை ஆந்திராவில் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.