May 28, 2019 10:17 AM

முன்னணி ஹீரோ படத்தை நிராகரித்த நிவேதா தாமஸ்! - காரணம் இது தான்

முன்னணி ஹீரோ படத்தை நிராகரித்த நிவேதா தாமஸ்! - காரணம் இது தான்

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த நிவேதா தாமஸ், ‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு மகளாக நடித்ததோடு, ‘ஜில்லா’ படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்தார். பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர், தற்போது ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்கிறார்.

 

இந்த நிலையில், தனக்கு வரும் தொடர் பட வாய்ப்புகளை நிவேதா தாமஸ் நிராகரித்து வருவதாக கூறப்படுகிறது. காரணம், அவருக்கு அதிகமான தங்கை வேடங்கள் தான் வருகிறதம்.

 

ஹீரோயினாக நடிப்பதில் தீவிரம் காட்டும் நிவேதா தாமஸுக்கு அதிகமாக தங்கை வேடங்களே வருவதால், இனி தங்கை வேடங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பவர், எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் தங்கை வேடம் என்றால் அந்த படத்திற்கு நோ சொல்லிவிடுகிறாராம்.

 

சமீபத்தில், தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் படத்திலும் தங்கையாக நடிக்க அழைத்தார்களாம். ஆனால், அவர் தங்கையாக நடிக்க விருப்பமில்லை என்று கூறி அப்படத்தை நிராகரித்து விட்டாராம்.