May 10, 2019 05:23 AM

டி.எம்.எஸ்ஸை நினைவுப்படுத்தும் நார்வே பாடகர் டி.எஸ்.ஜெயராஜன்!

டி.எம்.எஸ்ஸை நினைவுப்படுத்தும் நார்வே பாடகர் டி.எஸ்.ஜெயராஜன்!

டி.எம்.எஸ், ஜேசுதாஸ், எஸ்.பி.பி உள்ளிட்ட பலர் தங்களது தனித்துவமான குரலால், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்களை பாடியிருக்கிறார்கள். இப்போதும் அவர்கள் பாடிய பாடல் ஒலித்தால், அந்த பாடல் பாடியது யார்? என்று ரசிகர்கள் கூறும் அளவுக்கு தனித்துவமான குரல் வலத்தோடு தமிழ் சினிமாவில் வலம் வந்த இவர்களது காலம் இசையின் பொற்காலம் என்றே சொல்லலாம்.

 

தற்போதும் பல பாடகர்கள் பல ஹிட் பாடல்களை கொடுத்தாலும், அவர்களிடம் அந்த தனித்துவம் இல்லை என்பதோடு, பல பாடல்களை யார் பாடுகிறார்கள் என்று கணித்து கூற முடியாத அளவுக்கு பெரும்பாலான குரல்கள் பத்தில் பதினொன்றாகவே இருக்க, இந்த குறையை போக்கும் விதத்தில் சமீபத்திய தமிழ் சினிமாவின் வரவான நார்வே தமிழரான பாடகர் டி.எஸ்.ஜெயராஜனின் குரல் பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது.

 

Singer TS Jeyarajan

 

இதுவரை 10 க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியிருக்கும் டி.எஸ்.ஜெயராஜன், 60 க்கும் மேற்பட இசை ஆல்பங்களை பாடி வெளியிட்டிருக்கிறார். அதில் பெரும்பாலான ஆல்பங்கள் பக்தி ஆல்பங்களாகும். இந்த ஆல்பங்கங்களுக்கு தஷி உள்ளிட்ட பல பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள்.

 

பாட்டுக்காக நார்வே நாட்டில் இருந்து சென்னைக்கு அவ்வபோது பறந்து வரும் டி.எஸ்.ஜெயராஜன், வியாபார நோக்கத்துடன் அல்லாமல் பொது சேவையாக பக்தி ஆல்பங்களை தனது சொந்த செலவிலேயே தயாரித்து பல கோவில்களுக்கு வழங்கி வருகிறார்.

 

அந்த வகையில், இவர் பாடிய ‘அன்னை அங்காளி’, ‘முத்துமாரியம்மன்’, சாய் பாபாவை பற்றி ‘உன்னை சரணடைந்தேன்’ போன்ற பக்தி ஆல்பங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றவையாகும். சமீபத்தில் கூட, சிவபெருமானைப் பற்றி ‘ஏகாம்பர நாதரே’ என்ற இசை ஆல்பத்தை பாடி தயாரித்து, அதை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பர நாதர் கோவிலேயே வெளியிட்டார்.

 

Singer Jayarajan

 

‘புதிய காவியம்’, ‘ஆடவர்’, ‘சங்கர் ஊர் ராஜபாளையம்’ ஆகிய திரைப்படங்களில் பாடியிருக்கும் டி.எஸ்.ஜெயராஜன், தற்போது ‘பெருநாளி’, ’சாதனைப் பயணம்’ ஆகிய படங்களில் பாடியிருக்கிறார்.

 

இசையின் மீது இருக்கும் ஆர்வத்தினால், ஒரு பாட்டு பாட வேண்டுமானாலும் நார்வேயில் இருந்து உடனே வந்துவிடும் டி.எஸ்.ஜெயராஜின் குரல் தனித்துவமான ஒன்றாக இருக்கிறது. பக்தி பாடல்களாகட்டும், சினிமா பாடல்களாகட்டும் தனது வித்தியாசமான குரலால் அதை மக்களின் மனதில் ஒலிக்க செய்யும் டி.எஸ்.ஜெயராஜனுக்கு இசையமைப்பாளர் தஷி, தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

 

Singer TS Jeyarajan and Music Director Thazhi