Aug 12, 2019 05:50 AM

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சமந்தாவின் ‘ஓ பேபி’ ரிலீஸ்

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சமந்தாவின் ‘ஓ பேபி’ ரிலீஸ்

சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரிபில், பி வி நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஓ பேபி’ திரைப்படம், வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியிடப்படுகிறது. 

 

ஒரு 70 வயது பெண்மணி, ஒரு மர்மமான புகைப்பட ஸ்டுடியோவுக்கு சென்று புகைப்படம் எடுத்தவுடன் 20 வயது மங்கையாக மாறி விடுகிறார். 

 

வீட்டின் முதியோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்க்கும் இந்த காலத்தில், ஒரு முதியவர் இளமை திரும்பினாலும், தனது குடும்பத்தை எப்படி பாதுகாக்கிறார் என்பதை கற்பனை கலந்து, ஜனரஞ்சகமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

 

இப்படத்திற்கு ரிச்சர்ட் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, ஜுனைத் சித்திக் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார்.

 

மிக்கி ஜே மேயர் இசையமைக்க, டி சாய் மோகன் குமார் வசனமும் பாடல்களும் எழுத, சுனந்தன், வேலு மற்றும் சமன்விதா சசிதரன் பாடல்களை பாடியிருக்கிறார்கள். விட்டல் கோசனம் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்று இருக்கிறார் . 

 

டிராகன் பிரகாஷ் சண்டை பயிற்சியினை கவனித்து கொள்ள, நடனம் சின்ன பிரகாஷ் மற்றும் ரகுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியாகவுள்ள ‘ஓ பேபி’ திரைப்படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரிக்க, பி.வி.நந்தினி ரெட்டி இயக்கியிருக்கிறார்.