Feb 14, 2020 09:56 AM

பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நிகழ்த்திய ‘ஓ மை கடவுளே’! - மகிழ்ச்சியில் படக்குழு

பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நிகழ்த்திய ‘ஓ மை கடவுளே’! - மகிழ்ச்சியில் படக்குழு

அசோக் செல்வன், விஜய் சேதுபதி, ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓ மை கடவுளே’. அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இப்படத்தை அக்ஸச் பிலிம் பேக்டரி ஜி.டில்லி பாபுவும்,  ஹாப்பி ஹை பிக்சர்ஸ் அபிநயா செல்வமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

 

காதல் கதையை வித்தியாசமான பாணியில் சொல்லியிருக்கும் இப்படம் இன்று (பிப்.14) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சக்தி வேலன் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களையும், முன்னணி ஹீரோக்கள் படங்களையும் வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் ஒரு படத்தை வெளியிடுகிறது, என்றால் அப்படம் தரமான படமாக இருக்கும், என்று ரசிகர்கள் நம்பும் அளவுக்கு சக்தி வேலன் தொடர்ந்து பல நல்லப் படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

அந்த வகையில், இன்று வெளியாகியுள்ள ‘ஓ மை கடவுளே’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தியுள்ளது. அனைத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் அட்வான்ஸ் புக்கிங் எதிர்ப்பார்த்ததை விட பெரிய அளவில் புக்காகியிருக்கிறதாம். மேலும், படம் வெளியான முதல் நாளான இன்றே, பல தியேட்டர்களில் ஹவுஸ் புல்லாகியிருக்கிறதாம்.

 

இது குறித்து தனது ட்விட்டர் சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன், சிறப்பான அட்வான்ஸ் புக்கிங்கை பெற்றிருக்கும் ‘ஓ மை கடவுளே’ படம் பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நிகழ்த்தியுள்ளது. மீண்டும் ஒரு முறை கண்டெண்ட் தான் கிங் என்பதை இப்படம் நிரூபித்திருக்கிறது. இப்படத்தை வெளியிட்டதில் பெருமை அடைகிறோம், என்று தெரிவித்துள்ளார்.