Feb 09, 2019 01:15 PM

ஒரு இரவுக்கு ஒரு கோடி ரூபாய்! - நடிகையின் திடீர் பல்டி

ஒரு இரவுக்கு ஒரு கோடி ரூபாய்! - நடிகையின் திடீர் பல்டி

தெலுங்கு சினிமாவை சேர்ந்த சாக்‌ஷி சவுத்ரி, ‘ஆயிரத்தில் இருவர்’ என்ற படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார். இவர் படங்களில் நடிப்பதை விட, தனது ஹாட்டான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலமாகி வருகிறார்.

 

சமீபத்தில் புகைப்படம் ஒன்றுடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த சாக்‌ஷி சவுத்ரி, தனது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அசந்து போவதாக கூறியதோடு, சிலர் ஒரு இரவுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால், நான் விற்பனைக்கு இல்லை, என்று கூறிவிட்டேன், என்று தெரிவித்திருந்தார்.

 

சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் ஒரு கோடி ரூபாய் குறித்து கேட்டதற்கு, நான் அப்படியெல்லம் கூறவில்லை, என்று பல்டியடித்துள்ளார். அத்துடன், தனது ட்விட்டர் கணக்கை வேறு ஒருவர் கவணிக்கிறார், அவருக்கு அதுபோன்ற மெசஜ் வந்திருக்கும், அவர் அதற்கு அப்படி பதில் அளித்திருப்பார், என்றும் தெரிவித்திருக்கிறார்.