Oct 06, 2019 05:55 AM

பிக் பாஸ் வீட்டின் 4 போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டார்!

பிக் பாஸ் வீட்டின் 4 போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டார்!

பிக் பாஸ் சீசன் 3 இன்றுடன் முடிவடைய உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பிக் பாஸ் 3-யின் வெற்றியாளர் யார்? என்பது தெரிந்துவிடும். அநேகமாக முகேன் தான் வெற்றியாளர் என்பது உறுதியாகியுள்ள நிலையில், தற்போது இருக்கும் நான்கு போட்டியாளர்களில் ஒருவர் இன்று வெளியேற்றப்பட்டு, இறுதி சுற்றுக்கு மூன்று பேர் தேர்வாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

லொஸ்லியா, ஷெரீன், சாண்டி மற்றும் முகேன் என நான்கு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தாலும் இறுதிச் சுற்றுக்கு மூன்று பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். அதனால், ஒருவரை பிக் பாஸ் வெளியேற்றிவிட்டார்.

 

அந்த ஒருவர் லொஸ்லியா மற்றும் ஷெரீன் இருவரில் ஒருவராக தான இருக்க முடியும். காரணம், முகேனும், சாண்டியும் ஏற்கனவே இறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிட்டார்கள். லொஸ்லியா மற்றும் ஷெரீன் இருவருக்கும் இடையிலான ரசிகர்கள் வாக்குகளில் ஷெரீன் குறைவான வாக்குகள் பெற்றதால் அவர் வெளியேற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

 

அதன்படி, இன்றைய இறுதி நாளில் ஷெரீன் வெளியேற்றப்பட்டு, பிறகு டைடில் வின்னருக்கான தேர்வு நடைபெறும் என்று கூறப்படுகிறது.