Aug 10, 2019 05:54 AM

ஒரு பக்கம் ‘நேர்கொண்ட பார்வை’, மறுபக்கம் தூக்கம்! - பரபரப்பு வீடியோ இதோ

ஒரு பக்கம் ‘நேர்கொண்ட பார்வை’, மறுபக்கம் தூக்கம்! - பரபரப்பு வீடியோ இதோ

அஜித் நடிப்பில் கடந்த 8 ஆம் தேதி வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படம் குறித்து கலவையான விமர்சங்கள் வந்திருக்கின்றன. இது அஜித் படமாக இல்லை, என்று கூறப்பட்டாலும் அஜித்தின் இந்த வித்தியாசமான முயற்சியை மக்களும், பெரும்பாலான ஊடகங்களும் வரவேற்றுள்ளன.

 

அதேபோல், பெண்களும் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

 

அதே சமயம், அஜித் ரசிகர்களில் சிலர் இப்படத்தை ஏற்றுக்கொண்டாலும் பெரும்பாலான ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். டிரைலரில் இடம்பெற்ற சண்டைக்காட்சியை பார்த்து, படத்திலும் மாஸான சண்டைக்காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் இருக்கும் என்று எதிர்ப்பார்த்த அஜித் ரசிகர்களுக்கு, அவை இல்லாததால் ஏமாற்றமே மிஞ்சியது. மேலும், நீதிமன்றத்திலே இரண்டாம் பாதி முழுவதும் முடிவதும் ரசிகர்களை சலிப்படைய வைத்திருக்கிறது.

 

இந்த நிலையில், திரையரங்கம் ஒன்றில் ’நேர்கொண்ட பார்வை’ படம் பார்த்த ரசிகர் ஒருவர், சலிப்படைந்து திரையரங்கிலே சாவகாசமாக படுத்து உறங்கியுள்ளார். அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

 

இதோ அந்த வீடியோ,