Oct 29, 2018 05:22 AM

படத்தில் மட்டும் அல்ல, இந்த விஷயத்திலும் லாரன்ஸுக்கு ஒத்துழைத்த ஓவியா!

படத்தில் மட்டும் அல்ல, இந்த விஷயத்திலும் லாரன்ஸுக்கு ஒத்துழைத்த ஓவியா!

நடிப்பு, இயக்கும், தயாரிப்பு என்று சினிமாவில் பிஸியாக இருக்கும் ராகவா லாரன், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டுவதைப் போல சமூக சேவைகளிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வரும் லாரன்ஸ், தற்போது அரசு பள்ளிகளை தத்தெடுத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

 

“அரசாங்க பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் பள்ளிகளை தத்தெடுத்து சீரமைத்து தந்தால் உதவியாக இருக்கும்” என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விடுத்த வேண்டுகோளுக்கினங்க, சென்னை பாடி அருகில் உள்ள அரசு பள்ளி ஒன்றையும், செஞ்சி அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தவர், பழைய கட்டிடமாக இருந்த பள்ளிகளை சீரமைத்து தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றி கொடுத்திருக்கிறார்.

 

செஞ்சி அருகே மேல்மலயனூர் பக்கத்தில் உள்ள அரசு பள்ளிக்கு கழிப்பிட வசதி மற்றும் சிதிலமடைந்த பகுதிகளை புதுப்பித்து வர்ணம் அடித்து, புதிய கட்டிடமாக மாற்றிக் கொடுத்திருக்கிறார்.  இன்று (அக்.29) ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் என்பதால், இன்றைய தினம் புதுப்பிக்கப்பட்ட மேல்மலயனூர் அரசு பள்ளியின் திறப்பு விழாவை, அப்பள்ளி நிர்வாகத்தினர் வைத்துள்ளனர்.

 

லாரன்ஸின் தாயார் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் இருப்பதால், பள்ளி திறப்பு விழாவில் லாரன்ஸால் கலந்துக்கொள்ள முடியவில்லை. அதே சமயம், அவர் இயக்கு நடிக்கும் ’காஞ்சனா 3’ படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ஓவியாவை, பள்ளி திறப்பு விழாவில் பங்கேற்க செய்துள்ளார். அதன்படி, இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பள்ளி திறப்பு விழாவில் நடிகை ஓவியா பங்கேற்கிறார்.

 

தன்னால் படிக்க முடியவில்லை என்றாலும், படிக்கும் குழந்தைகள் நிம்மதியாக படிக்க வேண்டும், என்பதால் இந்த இரண்டு அரசு பள்ளிகளை தத்தெடுத்து சீரமைத்திருக்கும் லாரன்ஸ், இதை இவ்விருண்டு பள்ளிகளோடு நிறுத்திக் கொள்ளாமல் தன்னால் எத்தனை பள்ளிகளை சீரமைக்க முடியுமோ அத்தனை பள்ளிகளை சீரமைக்க முடிவு செய்திருக்கிறார்.

 

லாரன்ஸின் பள்ளி பணி தொடர வாழ்த்துகள்.