Sep 03, 2025 11:49 AM

’பனை’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

’பனை’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். பனைமரம் பாரத தேசமெங்கும் பரவ வேண்டும் என்ற மையக் கருத்தையும், கோயில் அர்ச்சகரின் மகள் பனைத் தொழில் புரியும் இளைஞர் மீது ஏற்படும் ஒரு தலை காதலால் நிகழும் விபரீதங்களையும்  கொண்டு உருவாகியுள்ள படமே ’பனை’ என்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் எம்.ராஜேந்திரன்.

 

இப்படத்தின் கதையின் நாயகனாக ஹரிஷ் பிரபாகரன் நடிக்க நாயகியாக மேக்னா நடித்திருக்கிறார். இவர்களுடன் வடிவுக்கரசி,அனுபமா குமார், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, டி.எஸ்.ஆர், லாலா கடை ரிஷா,ஜேக்கப், எம்.ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

 

இப்படத்தை ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் கதை திரைக்கதை  வசனம் எழுதி தயாரித்து அட்டகாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

 

மீரா லால் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். சிவக்குமார் ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, தினா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பாளராக வெங்கட் பணியாற்றுகிறார். இணைத் தயாரிப்பை ஜெ.பிரபகரன் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கிறார். ஆதி பி.ஆறுமுகம் இயக்கியிருக்கிறார்.

 

இப்படத்தில் ”பனைமரம் பனைமரம் பணம் காய்க்கும் பனைமரம் பசி தீர்க்கும் மரமய்யா பனைமரம்...’ உள்ளிட்ட மூன்று பாடல்களும் முத்தாக அமைந்துள்ளது.

 

ராஜா அண்ணாச்சி எனும் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் எம்.ராஜேந்திரன் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். ரகுவரன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் போன்று வில்லன் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.

 

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டு தயாராக உள்ள ‘பனை’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி ‘பனை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.