Aug 07, 2018 01:13 PM
’கடைக்குட்டி சிங்கம்’ வெற்றி - குலதெய்வத்திற்கு கிடா வெட்டிய பாண்டிராஜ்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜ், சூரி, சாயீஷா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ பெரும் வரவேற்பை பெற்று தற்போது வெற்றிகரமாக் ஓடிக்கொண்டிருக்கிறது.
நடிகர் சூர்யா தயாரித்த இப்படம் குடும்ப உறவுகளைப் பற்றி சொல்வதோடு, விவசாயம் பற்றியும் பேசியதால் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் வெற்றியடைந்ததால், இயக்குநர் பாண்டிராஜ் தனது சொந்த ஊரான விராச்சிலைக்கு குடும்பத்தோடு சென்று அங்குள்ள குலதெய்வம் கோவிலுக்கு குதிரை எடுத்து கிடா வெட்டி பொங்கல் வைத்தார். இந்த நிகழ்வில் பாண்டியராஜின் உறவினர்கள் மற்றும் அவரது ஊர் மக்கள் கலந்துக் கொண்டார்கள்.