Mar 08, 2019 05:28 AM

பரவை முனியம்மாவின் சோகமான வேண்டுகோள்! - செவி சாய்க்குமா அரசு

பரவை முனியம்மாவின் சோகமான வேண்டுகோள்! - செவி சாய்க்குமா அரசு

”சிங்கம்போல...” பாடல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பரவிய பரவை முனியம்மா, தமிழகத்தின் புகழ் பெற்ற நாட்டுப்புற பாடகியாக வலம் வந்தவர். 60 வயதில் வந்த சினிமா வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பாடகியாகவும், நடிகையாகவும் தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டியவருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

தனக்கு கலைமாமணி விருது கிடைத்ததால், தனது பல நாள் கனவு நிறைவேறிவிட்டதாக சந்தோஷப்படும் பரவை முனியம்மா, அதே சமயம் அரசிடம் சோகமான வேண்டுகோள் ஒன்றையும் வைத்திருக்கிறார்.

 

பரவை முனியம்மாவின் கடைசி மகனான செந்தில், மூளை வளர்ச்சியில் குறைபாடு உள்ளவராக இருக்கிறார்.

 

பரவை முனியம்மாவுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.6 லட்சம் மருத்துவ செலவுக்காக கொடுத்திருக்கிறார். அந்த பணத்தில் வர்ற வட்டியையும், எம்.ஜி.ஆர் அறக்கட்டளையில் இருந்து கிடைக்குற மாதாந்தர உதவித்தொகையையும் வச்சுதான் தற்போது காலத்தை ஓட்டிட்டு இருக்கிறாராம்.

 

தனக்குப் பிறகு தனது பிள்ளை செந்தில் கஷ்டப்படாமல் வாழ வேண்டும் என்று ஆசைப்படும் பரவை முனியம்மா, தன இல்லை என்றாலும், தனக்கு வந்துட்டு இருக்கிற உதவித்தொகை தனக்கு பிறகு தனது மகன் செந்திலுக்குக் கொடுத்தா உதவியா இருக்கும். என் மகன் எனக்குப் பிறகும் நல்லாருக்க அந்த உதவி நிச்சயம் வேண்டும், என்று அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

 

Paravai Muniyamma

 

தற்போது சினிமாவில் பாடுவதற்கும், நடிப்பதற்கும் பரவை முனியம்மாவுக்கு பல வாய்ப்புகள் வந்துக் கொண்டிருந்தாலும், தனது உடல்நிலையால் அவர் அவைகளை நிராகரித்து வருகிறாராம்.