Feb 09, 2019 05:23 AM

பார்த்திபன் - சீதா தம்பதியின் மூத்த மகளுக்கு திருமணம்! - மாப்பிள்ளை யார் தெரியுமா?

பார்த்திபன் - சீதா தம்பதியின் மூத்த மகளுக்கு திருமணம்! - மாப்பிள்ளை யார் தெரியுமா?

இயக்குநரும் நடிகருமான பார்த்திபனும், நடிகை சீதாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்கள். இவர்களுக்கு கீர்த்தனா, அபிநயா ஆகிய இரண்டு மகள்களும், ராக்கி என்ற ஒரு மகனும் உள்ளார். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக சீதாவும், பார்த்திபனும் விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார்கள். மகன் ராக்கி மற்றும் மகள் கீர்த்தனாவுடன் வசித்து வந்த நிலையில், அபிநயா மட்டும் சீதாவிடம் வசித்து வருகிறார்.

 

பார்த்திபன் - சீதா தம்பதியின் இளையமகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது மூத்த மகள் அபிநயாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவரை மணக்க இருக்கும் நரேஷ் கார்த்திக், நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன். அதாவது, எம்.ஆர்.வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன். இவர் சென்னையில் தொழில் செய்து வருகிறார்.

 

Seetha and Abhinaya

 

மகள் தன்னுடனே இருக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு வரன்களை தவிர்த்து வந்த சீதா, நரேஷ் சென்னையில் இருப்பதால் அவரை ஓகே செய்தாராம். மேலும், மாப்பிள்ளை வீட்டார் சீதாவின் தூரத்து உறவாம்.

 

அபிநயா - நரேஷ் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற நிலையில், திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. தற்போது மகளின் திருமணத்திற்காக சீதா அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.