Jun 01, 2020 09:48 AM

பசும்பொன் தேவரின் வாழ்க்கை திரைப்படமாகிறது!

பசும்பொன் தேவரின் வாழ்க்கை திரைப்படமாகிறது!

அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கையை படமாக்குவதில் பாலிவுட் சினிமா அதிக ஈடுபாடு காட்டி வரும் நிலையில், தற்போது தமிழ் சினிமாவிலும் அத்தகைய ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘கருப்பு நிலா’ என பல வெற்றிப் படங்களை இயக்கிய அரவிந்த்ராஜ், ‘தேசிய தலைவர்’ என்ற தலைப்பில் படம் ஒன்றை இயக்குகிறார். இப்படம் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகிறது.

 

இப்படத்தில் பசும்பொன் தேவர் வேடத்தில், ஜே.எம்.பஷீர் நடிக்கிறார். இதற்காக சிறப்பு விரதம் மேற்கொண்ட பஷீர், ஏற்கனவே ‘குற்றாலம்’ என்ற படத்தை தயாரித்து, ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

 

மேலும், தேவர் மீது அதிக மரியாதை கொண்ட பஷீர், வருடா வரும் பசும்பொன் சென்று தேவரை வணங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

Thesiya Thalaivar

 

பசும்பொன் தேவருடன் சிறு வயது முதல் அரசியலில் பங்கு பெற்றதோடு, அவரது சிஷ்யராகவும் திகழ்ந்த ஏ.ஆர்.பெருமாள் தேவர், எழுதிய ‘முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர்’ என்ற புத்தகத்தைல் இடம்பெற்றுள்ள வரலாற்று உண்மைகள் இப்படத்திற்காக படமாக்கப்பட உள்ளது.

 

ஜே.எம்.பஷீர் உடன் இணைந்து மதுரை ஏ.எம்.செளத்ரி தயாரிக்கும் இப்படத்தில் மேலும் பல முக்கிய நட்சத்திரங்களை நடிக்க வைப்பதற்காக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.