Nov 04, 2019 04:41 AM

இயக்குநர் அட்லீ மீது வழக்குப் பதிவு செய்த போலீஸ்!

இயக்குநர் அட்லீ மீது வழக்குப் பதிவு செய்த போலீஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்தாலும் அட்லீயை சுற்றி பல சர்ச்சைகள் உலா வருகிறது. இதில் குறிப்பாக கதை திருட்டு விவகாரம் தான். அவர் இயக்கிய அனைத்துப் படங்களையும் வேறு ஒரு படத்துடன் ஒப்பிட்டிருக்கிறார்கள்.

 

இதற்கிடையே, விஜயை வைத்து அட்லீ இயக்கியிருக்கும் மூன்றாவது படமான ‘பிகில்’ படம் கடந்த 25 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருந்தாலும், இப்படம் வெளியாவதற்கு முன்பே தொடங்கிய கதை திருட்டு விவகாரம் தற்போதும் தொடர்கிறது.

 

படம் வெளியாவதற்கு முன்பு தெலுங்கு இயக்குநர் நந்தி சின்னி குமார் என்பவர் ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

 

அந்தப் புகார் மனுவில், மராட்டியத்தைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் அகிலேஷ் பால் கதையைப் படமாக எடுக்க முடிவு செய்து அவருக்கு ரூ.12 லட்சம் தருவதாகப் பேசி முதல் கட்டமாக ரூ.5.5 லட்சம் கொடுத்தேன். இப்போது பிகில் படத்தை பார்த்து அதிர்ச்சியானேன். அகிலேஷ் பால் கதையும், பிகில் கதையும் ஒன்றுபோல் இருந்தது. இதனால், விஜய் மற்றும் அட்லீ ஆகியோரைத் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. என் கதையைத் திருடி படம் எடுத்த அட்லீ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

 

இந்த புகார் அடிப்படையில் கச்சிபவுலி காவல் துறையினர் இயக்குநர் அட்லீ மீது வழகுப் பதிவு செய்துள்ளனர்.