பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையப் போகும் போலீஸ்! - கைதாகும் போட்டியாளர்

பிக் பாஸ் சீசன் 3 கடந்த 23 ஆம் தேதி தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் நாளில் 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு, மாடலும் நடிகையுமான மீரா மிதுன் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார்.
சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன், பெற்ற மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டதோடு, அவருக்கு திருமணமானதை மறைத்து மிஸ் சவுத் இந்தியாவில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அழகிப் போட்டி நடத்துவதாக அவர் பல பெண்களை ஏமாற்றியிருப்பதாகவும் அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், போலீஸ் சம்மனுக்கு ஆஜராகாமல் ரகசியமாக பிக் பாஸ் வீட்டுக்குள் மீரா மிதுன் சென்றிருக்கிறார் என்று ஜோ என்பவர் புகார் அளித்துளார்.
அவரது புகாரை தொடர்ந்து புக் பாஸ் வீட்டுக்குள் சென்று மீரா மிதுனை போலீஸ் விரைவில் கைது செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.