பார்த்திபனிடம் ரூ.100 கோடிக்கு பேரம் நடத்திய அரசியல் தலைவர்!

நடிகரும் இயக்குநருமான பார்த்திபனிடம் அரசியல் தலைவர் ஒருவர், தனது கட்சியில் சேர்ந்தால் ரூ.100 கோடி தருவதாக பேரம் பேசிய தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோட்டில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் என பல திரையுலக பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் பார்த்திபன் கலந்துக் கொண்டு சினிமா பயணம் என்ற தலைப்பில் பேசினார். அப்போது தான் எப்படி சினிமாவுக்குள் வந்தேன், என்பது குறித்து பேசிய அவர், அரசியல் தலைவர் ஒருவர் தனக்கு ரூ.100 கோடி தருவதாகவும், அவர் கட்சியில் இணைந்துக் கொள்ளுமாறும் பேரம் பேசினார். ஆனால், அரசியல் தெரியாததால் நான் அந்த ஆபரை ஏற்கவில்லை, என்று தெரிவித்தார்.
மேலும், தற்போது தன்னிடம் 60 கதைகள் ரெடியாக இருப்பதாக கூறிய பார்த்திபன், அந்த கதைகளை படமாக்க தனக்கு ரூ.600 கோடி தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார்.