Mar 09, 2020 02:46 PM

‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்திற்கு சிங்கப்பூரில் பின்னணி இசை கோர்ப்பு!

‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்திற்கு சிங்கப்பூரில் பின்னணி இசை கோர்ப்பு!

80 வயதுக்கு மேலான சாருஹாசனை ஹீரோவாக்கிய ‘தாதா 87’ பட புகழ் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில், ஜிடிஆர் சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUPG)

 

தற்போது இணையதளத்தில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு இணைய விளையாட்டு எப்படி இளைஞர்களின் வாழ்வோடு விளையாடி வருகிறது என்பதை நாம் செய்திகளில் படித்துவரும் இந்த வேளையில், முற்றிலும் புதிய கோணத்தில் அந்த விளையாட்டையும் ஒரு பாத்திரமாகக் கொண்டு, ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது.

 

இப்படத்தில் நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, மைம் கோபி, மொட்ட ராஜேந்திரன், அனித்ரா நாயர், ‘நாடோடிகள்’ சாந்தினி, ஆராத்யா, சான்டிரியா, ஜூலி, ஆதித்யா கதிர், யோகி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

 

பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவில், சி எஸ் பிரேம்குமார் படத்தொகுப்பை கவனிக்க, ‘தாதா 87’ திரைப்படத்திற்கு இசையமைத்த லியாண்டர் லீ மார்ட்டி இப்படத்திலும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.  

 

Pollatha Ulagil Payangara Game

 

ஒரு கிரைம் திரில்லராக உருவாகிவரும் இந்த படத்திற்கு பின்னணி இசையின் முக்கியத்துவம் கருதி, இசை கோர்ப்பு மற்றும் ஒலிப்பதிவு பணிகள், சிங்கப்பூரில் உள்ள அதி நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட ஆர்டன்ட் ஸ்டுடியோவில், பிரபல ஒலி வல்லுநர் டேனியல் வாங் முன்னிலையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ புகழ் இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகின்ற கோடை விடுமுறை கால வெளியீடாக அமையும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.