Jan 10, 2020 01:21 AM

’பொன்னியின் செல்வன்’ புகைப்படங்கள் லீக்! - அதிர்ச்சியில் மணிரத்னம்

’பொன்னியின் செல்வன்’ புகைப்படங்கள் லீக்! - அதிர்ச்சியில் மணிரத்னம்

தமிழ் திரையுலக ஜாம்பவான்களின் கனவுப்படமான ’பொன்னியின் செல்வன்’ தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வருகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயராகும் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.

 

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயராம், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்தி வரும் மணிரத்னம், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பை சென்னையில் பிரம்மாண்டமான செட் அமைத்து நடத்த இருக்கிறார்.

 

இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோரது கெட்டப் புகைப்படங்களோடு, படப்பிடிப்பு தளப் புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகி வருகிறது. தனது படப்பிடிப்பு விவரங்களை ரகசியம் காக்கும் மணிரத்னம், தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களால் அதிர்ச்சியடைந்திருக்கிறாராம்.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

Ponniyin Selvan

 

Ponniyin Selvan

 

Ponniyin Selvan