Sep 30, 2019 06:52 PM

’இந்தியன் 2’ வில் பிரபல பாலிவுட் நடிகர்!

’இந்தியன் 2’ வில் பிரபல பாலிவுட் நடிகர்!

ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் இருக்கும் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக வார இறுதி நாட்களுக்கு மட்டும் சென்னை வந்து போகிறார்.

 

இதற்கிடையே, இப்படத்தில் விவேக், சிபிஐ அதிகாரி வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர், இயக்குநர் ஷங்கருடன் இருப்பது போன்ற உகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இந்தியன் 2 படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

அப்படியானால், அனில் கபூரும் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறாரோ!, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது, விவேக், பிரியா பவானி சங்கர், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிப்பது உறுதியான நிலையில், மேலும் சில முக்கிய நடிகர்கள் நடிப்பதாகவும், அவர்கள் குறித்து படக்குழு சஸ்பென்ஸ் காப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இதோ அந்த புகைப்படம்,

Director Shankar and Anil Kapoor