’பிகில்’ படத்தை நிராகரிக்கும் முக்கிய திரையரங்கம்!

விஜயின் ‘பிகில்’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இருப்பினும், படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதே சமயம், தமிழகம் முழுவதும் பிகில் படத்திற்கு திரையரங்கங்கள் ஒப்பந்தம் செய்வதில் தயாரிப்பு தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.
தீபாவளியன்று பிகிலுடன் கார்த்தியின் ‘கைதி’ படமும் வெளியாகிறது. கைதியை விட பிகிலுக்கு தான் அதிகம் திரையரங்கங்கள் கிடைக்கும் என்றாலும், கார்த்தியின் தயாரிப்பாளர் உறவினர்கள் இணைந்து விஜய் படத்திற்கு நிகராக கார்த்தியின் படத்தையும் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த நிலையில், திருச்சியில் உள்ள முக்கிய திரையரங்கில் விஜயின் பிகில் படத்தை நிரகாரித்துவிட்டு ‘கைதி’ படத்தை ரிலீஸ் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இது விஜய்க்கு ஏற்பட்ட மிகப்பெரிய சறுக்கல் என்றும் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வந்தது.
இதையடுத்து, இந்த தகவலை மறுத்திருக்கும் திரையரங்க நிர்வாகம், பிகில் மற்றும் கைதி இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, என்று தெரிவித்துள்ளது.