Apr 27, 2020 11:33 AM

கறி கடை காசியின் வலையில் சிக்கி சீரழிந்த பிரபல நடிகரின் மகள்!

கறி கடை காசியின் வலையில் சிக்கி சீரழிந்த பிரபல நடிகரின் மகள்!

பள்ளி மாணவிகள் முதல் மருத்துவர் என பல பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்தி சீரழித்த கறி கடை காசி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரின் காதல் லீலைகளும், அதனை வைத்து பணம் சம்பாதித்த முறையையும் ஒன்று ஒன்றாக வெளியாக, இதனால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

நாகர்கோவிலை சேர்ந்த காசி என்பவர் எம்.பி.ஏ படித்துவிட்டு வேலை ஏதும் இல்லாமல் இருந்திருக்கிறார். இதனால், தனது அப்பாவின் கோழிக்கறி கடையை பார்த்துக் கொண்டவர், வேலை முடிந்ததும் சமூக வலைதளங்களில் மூழ்கிவிடுவாராம். அதில், தன்னை அழகாக காட்டும்படி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், உயற்பயிற்சி புகைப்படங்கள் போன்றவற்றை காசி வெளியிட்டுள்ளார்.

 

மேலும், தனது போட்டோவுக்கு லைக் போடும் பெண்களிடம் நைசாக பேச சாட் செய்ய தொடங்கும் காசி, பிறகு அவர்களின் தொலைபேசி எண்களை வாங்கி அவர்களிடம் மணி கணக்கில் பேசுவதோடு, அவர்களை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததோடு, அதை வீடியோவாக எடுத்து பணம் பறிக்கவும் தொடங்கியுள்ளார்.

 

இப்படி காசியின் காம வலையில் சிக்கு 30-க்கும் மேற்பட்ட பெண்கள் சீரழிந்திருக்கும் நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஒருவரது மகளும் காசியில் வலையில் சிக்கி சீரழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்த நடிகர் யார்? என்பதை காவல் துறை ரகசியமாக வைத்திருப்பதோடு, அந்த பெண்ணை இந்த வழக்கில் சேர்க்கவும் இல்லை, என்று கூறப்படுகிறது.

 

தற்போது பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் காசியின் காம லீலைகளும், அதில் சிக்கியிருக்கும் பெண்கள் பற்றியும் வெளிவந்துக் கொண்டிருக்கையில், அந்த நடிகரின் மகள் குறித்தும் சிலர் ஆராயா தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.