Jun 10, 2020 11:31 AM

அனிருத் ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்க விரும்பும் பிரபல நடிகர்!

அனிருத் ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்க விரும்பும் பிரபல நடிகர்!

இளம் வயதில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், தனது பீட்கள் மூலம் இளசுகளின் பேவரைட் இசையமைப்பாளரானவர், பாட்டு பாடுவது, இசை ஆல்பங்கள் மற்றும் விளம்பரப் படங்களில் நடிப்பது என்றும் இருக்கிறார்.

 

இதற்கிடையே அனிருத், ஹீரோவாக களம் இறங்க இருப்பதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூறப்பட்டது. பிறகு ரஜினிகாந்தின் அறிவுரையை கேட்டு தொடர்ந்து இசையமைப்பதில் தனது கவனத்தை செலுத்த தொடங்கியதாகவும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், அனிருத் தனது புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட, அந்த புகைப்படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், “சார் எப்ப வேணாலும் சரி, எப்படி வேணாலும் சரி, நீங்க நடிக்கும் முதல் படத்தை நான் தான் தயாரிக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

 

Sivakarthikeyan

 

சிவகார்த்திகேயனின் பதிவுக்கு பதிலைப் பார்த்த ‘கோலமாவு கோகிலா’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘டாக்டர்’ ஆகிய படங்களின் இயக்குநர் நெல்சன், ”அனிருத் ஹீரோவாக களம் இறங்கும் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன்” என்று பதிவிட்டார்.

 

இந்த இரண்டு பதிவுகளுக்கும் பதில் அளித்த அனிருத், முதலில் ‘டாக்டர்’ படத்தின் பணிகளை முடியுங்கள், என்று தெரிவித்துள்ளார்.

 

விஜயின் ‘மாஸ்டர்’ படத்திற்கு இசையமைத்திருக்கும் அனிருத், தற்போது சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ மற்றும் விக்ரமின் 60 வது படத்திற்கு இசையமைக்கிறார்.