Jun 10, 2019 08:01 AM

சினேகாவை எட்டி உதைத்த பிரபல நடிகர்! - அதிர்ச்சியில் கோலிவுட்

சினேகாவை எட்டி உதைத்த பிரபல நடிகர்! - அதிர்ச்சியில் கோலிவுட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா. கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர், தனுஷ், சிம்பு என இளம் ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.

 

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சினேகா, திருமணத்திற்குப் பிறகும் சில படங்களில் நடித்தவர், குழந்தை பிறப்புக்காக நடிப்புக்கு சிறுது காலம் ஓய்வுக்கொடுத்தார். தற்போது அவரது மகன் வளர்ந்துவிட்டதால் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

 

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்தவர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், பிரபல நடிகர் ஒருவர் சினேகாவின் வயிற்றில் எட்டி உதைத்த சம்பவம் பற்றி தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘புதுப்பேட்டை’ படத்தில் ஹீரோயினாக சினேகா நடித்திருந்தார். இப்படத்தில் விலைமாது வேடத்தில் நடித்த சினேகாவை வில்லனாக நடித்த நடிகர் பாலா சிங், ஒரு காட்சியில் எட்டி உதைப்பார்.

 

இந்த காட்சி படமாக்கப்பட்ட போது, வயிற்றில் மிதிக்க வேண்டும் என்பதால், நடிகர் பாலா சிங் மிக கவனத்துடன் அந்த காட்சியில் நடித்தாராம். அதனாலேயே அந்த காட்சி அதிக டேக்குகள் போக, ஒரு கட்டத்தில் பாலா சிங், நிஜமாகவே சினேகா வயிற்றில் எட்டி உதைத்து விட்டாராம்.

 

உடனே காட்சி ஓகே ஆனாலும், அந்த காட்சியில் நடித்ததால் பாலா சிங்கிற்கு மிகவும் தர்மசங்கடமாகிவிட்டதாம்.

 

Actor Bala Singh

 

இந்த தகவலை நடிகர் பாலா சிங், சமீபத்திய பேட்டி ஒன்றில் கூற, தற்போது கோலிவுட்டே அதிர்ச்சியடைந்திருக்கிறது.